Breaking
Sat. Dec 21st, 2024

ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் இரகசிய பொலிஸார் முன்வைத்த கோரிக்கையானதுநீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு 14 மில்லியன் அமெரிக்க டொலரகளுக்கு மிக் விமானக் கொள்வனவு கொடுக்கல்வாங்கல் தொடர்பாக உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு இரகசியப் பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கைவிடுத்தனர்.

எனினும் நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று இரண்டாவது தடவையாகவும் குறித்தகோரிக்கையினை நிராகரித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ரஸ்யாவிற்கான தூதுவர் குறித்த வழக்கின் குற்றவாளியாக இன்னும்குறிப்பிடப்படாத போது அவருக்கு பிடியாணை பிறப்பிப்பதானது சட்டகொள்கைகளுக்கு முரணானது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது தங்கியுள்ள நாட்டின் முகவரியைத் தெரிந்து அதற்கு தபால்மூலம் அறிவிப்பு அனுப்புமாறும் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

By

Related Post