Breaking
Mon. Dec 23rd, 2024

பாடசாலை ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மாணவன் ஒருவன் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாத்தாண்டிய, கொட்டரமுல்ல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் தரம் 05ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீது நேற்று இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான குறித்த மாணவன் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நேற்று குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.

இதில் ஒரு மாணவனுடைய சகோதரி, ஆசிரியை ஒருவருடைய தொலைபேசியை எடுத்து சம்பவம் தொடர்பாக தந்தையிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து பின்பக்க வாசாலால் யாரும் அறியாமல் பாடசாலையினுள் நுழைந்த தந்தை, தனது மகனுடன் சண்டையிட்ட மற்றைய மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

பின்னர் பாடசாலையின் அதிபருக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ அறிவிக்காமல் தனது மகனை பாடசாலையில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபரினால் கொஸ்வத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

By

Related Post