Breaking
Thu. Dec 26th, 2024
சிரியாவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி தனியாக தரைவழி தாக்குதல்களை நடத்தாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவ்சொக்லு குறிப்பிட்டுள்ளார். இதில் துருக்கி சென்றிருக்கும் நேட்டோ தலைவர் ஜன் ஸ்டொல் டன்பேர்க்குடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் துருக்கி அரசு தனது சிரிய எல்லைப் பகுதியில் விமானம் பறக்க தடை வலயம் ஒன்றை அறி வித்துள்ளது.
 
இந்நிலையில் சிரியாவின் துருக்கி எல்லை நகரான கொபானியின் மூன்றில் ஒரு பகுதி ஐ.எஸ். போராளிகளின் கட்டுப்பாட்டில் வீழ்ந்திருப்பதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிரியா தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மனித உரிமை அமைப்பு நம்பகமான தர ப்பை மேற்கோள்காட்டி வெளியிட்டிருக்கும் செய்தியில், கொபானி நகரின் கிழக்கு பகுதியில் இரு ந்து ஐ.எஸ். போராளிகள் நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக குறிப்பிடப்ப ட்டுள்ளது.
 
இந்நிலையில் கொபானியில் ஐ.எஸ். க்கு எதிராக போராடும் குர்திஷ் போராளிகளுக்கு உதவும்படி துருக்கி அரசுக்கு அந்நாட்டு குர்திஷ்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
 
கொபானி நகரில் இருக்கும் குர்திஷ் தலைவர்களில் ஒருவர் வழங்கிய தகவலின்படி, ஐ.எஸ். போராளிகள் புதன் இரவு மேலும் இரு பகுதிகளால் கன ரக ஆயுதங்களுடன் நகருக்குள் நுழைந்துள்ளனர்.
 
துருக்கி தனது எல்லையில் பீரங்கிகளை வரிசையாக நிறுத்திவைத்துள்ளது. எனினும் அது எந்த தலையிடும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
 
ஐ.எஸ். க்கு எதிரான துருக்கி செயற்பாடுகளின் சாத்தியம் குறித்து துருக்கி வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். “துருக்கி தனியாக தரை வழி தாக்குதலை நடத்த எதிர்பார்ப்பது யதார்த்தமானதல்ல. நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி னோம். அதில் பொதுவான முடிவுகள் எடுக்கப்பட்டன. துருக்கி தனது பங்கை செயற்படுத்துவதை நிறுத்தாது” என்று குறித்த பேச்சுவார்த்தைக்கு பின் துருக்கி வெளியுறவு அமைச்சர் கவ்சொக்லு குறிப்பிட்டார்.
 
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான நிலத்தை கைப்பற்றியதை அடுத்து அவர்களுக்கு எதிராக அமெரிக்கா ஒரு பர ந்த சர்வதேச கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது. ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்தும் இரு நாடுகளுட னும் துருக்கி தனது எல்லையை பகிர்ந்து கொண் டுள்ளது. இதில் ஐ.எஸ்க்கு எதிராக போராடு குர்திஷ்களுக்கு உதவுவதற்கு துருக்கி தயக்கம் காட்டி வருகிறது. ஏற்கனவே துருக்கி சிறுபான்மை குர் திஷ்களுடன் உள்நாட்டு யுத்தத்திற்கு முகம்கொ டுத்து வருகிறது.
 
குர்திஷ் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிரிய யுத்தத்தில் துருக்கியை தலையிட அழுத்தம் கொடுத்து பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகி ன்றனர். இதில் ஸ்தன்பு+லில் புதன் இரவு இடம்பெ ற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தண்ணீர் பீச்சியடித்தனர்.
 
எனினும் ஓர் இராணுவ நடவடிக்கைக்கு துருக்கி அரசு கடந்த வாரம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி தனது சிரிய எல்லைப்பகுதியில் பாதுகாப்பு வலயம் ஒன்றை நிறுவ முயற்சித்து வருகிறது. இந்த திட்டத்திற்கு பிரான்ஸ் ஆதரவளித்தபோ தும், தற்போதைய சூழலில் இது கருத்தில் கொல்ல முடியுமானதாக இல்லை என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. கொபானி நகரில் எட்டு இல க்குகள் மீது புதன் இரவு தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க கட்டளை மையம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஐந்து ஐ.எஸ். கவச வாகனங்கள், ஒரு ஐ.எஸ். வினியோகக் கிடங்கு மற்றும் ஏனைய கட்டடங்கள் தாக்கப்பட்ட தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனினும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் துணை அட்மிரல் ஜோன் கிர்பி குறிப்பிடும்போது, “வான் தாக்குல் மூலம் மாத்திரம் கொபானி நகரை பாதுகாக்க முடியாது. இதனை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம் என்பது எமக்கு தெரியும்” என்று எச்ச ரித்தார்.
 
சிரிய கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக் துருப்புகள்; ஐ.எஸ். போராளிகளை இறுதியில் வீழ்த்துவார்கள். ஆனால் அதற்கு காலம் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். “சிரியாவுக்குள் தரைவழியாக எமக்கு தயார் நிலையில் இருக்கும் திறமையான பங்காளிகள் இல்லை. எனவே வேறு நகரங்களும் வீழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் பிலிப் ஹம்மன்டும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். ஐ.எஸ். போராளிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கு கொபானி நகர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் இரு ந்து ஏற்கனவே சுமார் 200,000 மக்கள் வெளியேறி துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர்.
 
கொபானி நகர் வீழும் பட்சத்தில் சிரியா மற்றும் துருக்கிக்கு இடையிலான சுமார் 820 கிலோமீற்றர் எல்லையில் பாதியளவான பகுதி ஐ.எஸ். பேராளி களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

Related Post