Breaking
Mon. Dec 23rd, 2024

பதுளை மாவட்டம், எல்ல, உடுவர பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு நடவடிக்கையில்ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் 16 மற்றும் 14 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரவு வேளைகளில் வர்த்தக நிலையத்தின் பூட்டினை உடைத்து அங்குள்ள பொருட்கள்மற்றும் பணத்தினை கொள்ளையடித்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதனையடுத்து நேற்றைய தினம் (02) குறித்த மூன்றுமாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் கொள்ளையிட்ட பணத்தினை செலவு செய்துள்ளதோடு, திருடிய பிஸ்கட்மற்றும் மென்பானங்களை அருந்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்

By

Related Post