Breaking
Sun. Sep 22nd, 2024
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றீ­டாக அறி­மு­கப்­ப­டுத்தப் பட­வுள்ள புதிய சட்ட ஏற்­பாடு முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­படுத்தும் வகையில் அமை­ய­வுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சட்­டப்­பி­ரிவின் பணிப்­பாளர் சட்­டத்த­ரணி றுஸ்தி ஹபீப் தெரி­வித்தார்.
பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றீ­டாக அறி­மு­கப்­ப­டுத்தப் பட­வுள்ள  சட்ட ஏற்­பாடு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்குப் பதி­லாக மற்­று­மொரு சட்ட ஏற்­பாட்டை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு  அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
அதற்­கான சட்ட வரைபுப் பணிகள் தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அந்தச் சட்ட வரைபு இறு­திக்­கட்­டத்தை அடை­யா­த­போ­திலும் தற்­போ­தைய வரைபின் பிர­காரம் அது முஸ்­லிம்­களை பாதிக்கும் வகையில் உள்­ளது. பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் தமிழ் மக்­களின் விட­யத்தில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­துபோல் புதிய சட்ட வரைபின் பிர­காரம் அது முஸ்­லிம்­களை பாதிக்­க­வுள்­ளது.
பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் அப்­பாவித் தமிழ் மக்கள் மீது அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தால்தான் அச்­சட்டம் மாற்­றப்­ப­டு­கி­றது.
எனவே அதற்குப் பதி­லாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள புதிய சட்ட ஏற்­பாடு மற்­று­மொரு சாதா­ரண சமூ­கத்தை பாதிக்­கு­மாயின் அதனை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
ஆகவே அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்ள புதிய சட்ட ஏற்­பாடு எந்­த­வொரு சாதா­ரண மக்­க­ளையும் பாதிக்­காத வகையில் அமைய வேண்டும்.
அது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவதானம் செலுத்தியுள்ளதுடன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post