இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் றீட்டாவை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் (10.10.2016) கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதன்போது இலங்கை முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் RRT சட்டத்தரணிகள் அமைப்பின் மூலம் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அரசியலமைப்பு சீர்திருத்தம், தனியார் சட்டம், தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம், மும்மண்ண முஸ்லிம் பாடலை மைதான விவகாரம், அழுத்தகம அசம்பாவிதம், வெறுப்புப் பேச்சு, இனவாத சக்திகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் தெஹிவளை, பொரலஸ்கமுவ மற்றும் பாத்தியா மாவத்தை பள்ளிவாசல் விவகாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்று கையளிக்கப்பட்டது.
இதேவேளை, இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேசசுவார்த்தை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)