Breaking
Fri. Nov 15th, 2024

‘தீனைக்’;காக்கவும்,    தீனின் தலைமைத்துவத்தைக் காக்கவும் அஹ்லுல் பைத் என்னும் ரஸூலுல்லாஹ்வின் (ஸல்) இரத்த உறவுகளின் உயிர்த்தியாகத்தால் ஏற்றப்பட்ட தீனின் தீபமே கர்பலா. அது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு  புகட்டிய  அறிவு நாதம்.

இன்றைய அரசியல் வரலாற்றில் குலபாயேராசிதீன்கள் ஆட்சியின் பின்வந்த உமைய்யா ஆட்சியில் முஆவியா (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட யஸீத் என்பவர் மக்கள் அங்கீகாரம் பெறாத, ஒழுக்கங் கெட்ட, குடிகார மன்னனாக ,மாற்றான் மனைவியை வைத்திருந்ததன் காரணமாக ரஸூலுல்லாஹ் (ஸல்)  அவர்களின் பேரன்  ஹூஸைன் (ரலி) அவர்கள் பையத் என்னும் சத்திய பிரமாணம் கொடுக்க  மறுத்ததோடு  அத்தகைய தீய தலைமைத்துவத்தை நீக்குவதற்கு கி.பி 680 இல் ஹிஜ்ரி 61 இல் முஹர்ரம் 10 ஆம் நாள் நடைபெற்ற தர்ம யுத்தமே  கர்பலா யுத்தமாகும்

ஓவ்வொரு கர்பலாவுக்குப் பின்னும் இஸ்லாம் புத்துயிர் பெறுகின்றது என்ற அல்லாமா இக்பாலின் கூற்றுக்கேற்ப  சந்தேகத்துக் கப்பாற்பட்ட, நேர்மையான, ஒழுக்கமுள்ள, இறைபக்தியுடைய தலைமைத்துவத்தைத் தோற்றுவிப்பது முஸ்லிம் சமூகத்தின் தார்மீகக் கடமை மட்டுமல்ல. அது ஒரு மார்க்கக் கடமையுமாகும்.

இங்ஙனம்,
எஸ். சுபைர்தீன்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  

By

Related Post