சம்மாந்துறை கல்லரிச்சல் (தென்னம்பிள்ளை) பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பெண்கள் கருத்தரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும், லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் கௌரவ S. சுபைதீன் ஹாஜியார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களின் தொழில் முயற்சி தொடர்பாக கலாநிதி S.M.M இஸ்மாயில் கருத்துதெரிவிக்கையில். “எதிர்காலத்தில் கைத்தொழில் பேட்டையின் வருகையை தொடர்ந்து இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் பலதரப்பட்ட தொழில் துறையினை வழங்குவோம். அவர்களின் பொருளாதாரத்துறையினை மேம்படுத்த இத்தொழில் பேட்டை ஒரு சக்தியாக விளங்கும். அத்துடன் வேலையில்லா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து சமூகத்தில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கையை குறைத்து சம்மாந்துறை மண்ணில் பாரிய ஒரு அபிவிருத்தியை உருவாக்க எண்ணியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் கௌரவ S.சுபைதீன் ஹாஜியார் அவர்கள் உருயாற்றுகையில்:-
“அமைக்கப்படவுள்ள தொழிற்பேட்டையின் மூலம் உருவாகவுள்ள 2000 வேலைவாய்ப்புகளில் இப்பிரதேச பெண்களுக்கும் உரிய இடம் அளிக்கப்ப்படுமென்று கூறியதோடு மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு எப்படி இப்பிரதேச மக்கள் ஆதரவளித்தார்களோ அத்தகைய தலைமைத்துவ பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களுக்கும் வழங்கும்படியும், அதுவே சமுதாயத்தின் விடிவுக்கு வழிவகுக்கும்” எனவும் கூறினார்.
இதன் போது இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பல பெண்கள் கைத்தொழில் பேட்டையின் வருகையை எதிர் பார்த்தவர்களாகவும் அத்தொழில் பேட்டையினை உருவாக்க தங்ககளால் முடியுமான உதவிகளை செய்வதாகவும் கூறினர்.