Breaking
Tue. Jan 7th, 2025

துப்பாக்கி முனையில்  L.T.T.E புலிப்பயங்கரவாதிகளினால்  மன்னார் வடபுல மக்கள் சகல உடைமைகளையும் இழந்து உயிர்களை மட்டும் கைகளில் ஏந்தியவர்களாக  தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன.

சிந்திய கண்ணீரும் கம்பலையுமாக அகதி முகாம்களில்  அவதிப்படும் அகதிகளான இடம் பெயர்ந்த தனது மக்களை பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்ற மக்களால்  தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம்   அசட்டையாகவும் பாராமுகமாகவும் இருப்பதை நினைத்து மேலும் கண்ணீர் சிந்த  வேண்டியேற்பட்டுள்ளது.  பலவந்தமாக இடம் பெயர்க்கப்பட்டோர் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு சகல உரிமையும்; உடையவர்கள் என்று ஐ.நா. மனித உரிமை சாசனம் பிரகடனப்படுத்தியிருந்த நிலையில்  ஐ.நா வினால் கூட பலவந்தமாக இடம் பெயர்க்கப்பட்ட இந்த மக்களை  மீள் குடியேற்றுவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை குறித்து வானோரும் கூட  கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.  வானம்  சிந்தும் மாமழையெல்லாம்  வானோர் சிந்தும்; அனுதாபக் கண்ணீரா என எண்ண வேண்டியுள்ளது.

 தமிழ்ப் பயங்கரவதிகளால் 1990 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் பலாத்காரமாய் ஆயுத பலம் கொண்டு அப்புறப்படுத்தப்பட்ட இந்த முஸ்லீம் அகதிகளை  மீள் குடியற்றுவதற்கு, இன்று தமிழ் முஸ்லீம் உறவைப் பேசிக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென்று  ஆசையோடு நேசக்கரம் நீட்டும்  தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற அங்கத்தவர்கள்   தமிழ்ப் புலிகளால் 1990 ஆம்  ஆண்டு வெளியேற்றப்பட்ட அனைத்து வடபுல முஸ்லீம்களையும் அவர்களின் பூர்வீக வாழ்விடங்களிலே  குடியேற்ற வேண்டுமென்;று ஒரு மசேதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து  நிறைவேற்றிக் காட்டுவார்களெயானால் அது அவர்களிக் அரசியல் உள்ளத் தூய்மையை மாத்திரமன்றி தமிழ் முஸ்லீம் உறவையும்  உறுதிப்படுத்த ஊன்றுகோலாய்  அமையும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன் .

இங்ஙனம்

எஸ். சுபைர்தீன்                                

செயலாளர் நாயகம்

அ.இ.ம.கா

 

By

Related Post