மிஸ்ரோ எனப்படும் முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பானது சாய்ந்தமருது கல்விக்கோட்டத்துக்குள் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச் சித்தியெய்திய 34 மாணவ மாணவிகளை கௌரவித்து பாராட்டும் நிகழ்வை 2016-11-27 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது.
இவ் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இக்தார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தொடர்பாடல் அதிகாரி ஏ.எல்.முக்தார் (ஜஹான்) விசேட அதிதியாகவும் அல் ஹிலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம் பைசால் மற்றும் மல்கர் சம்ஸ் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.மதனி ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து திறமைகாட்டிய மாணவர்களுக்கு பதக்கங்களையும் ஞாபக்கச்சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வின்போது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பதவி உயர்வு பெற்று செல்வதை முன்னிட்டும் அவர் இப்பிராந்தியத்துக்கு ஆற்றிய நல்ல சேவையைப் பாராட்டியும் அமைப்பின் சார்பில் பிரதம அதிதியால் பொன்னாடை அணிவித்து ஞாபக்கச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.