Breaking
Mon. Nov 18th, 2024
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நாட்டு முஸ்லிம்களின் அவசியமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களும் அவருடனே உள்ளனர் என  அமீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் விலகவுள்ளதாக வெளியான தகவல் தவறானது. அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் நான் இறுதிவரை இருப்பேன். முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பாரிய பங்காற்றிவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நமது கடமையாகும்.
யாழ்பாண மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை பலப்படுத்த மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்சிக்கு புதிய அங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அதுபோன்று யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்கருதி அமைச்சர் றிசாத்தின் நிதியொதுக்கீட்டில் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒஸ்மானியா கல்லூரிக்கும் அமைச்சர் றிசாத் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
தற்போது வடமாகாண சபை இயங்குவதால், சில அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நடைமுறைச் சாத்தியமான சிக்கல்கள் உள்ளன. அமைச்சர் றிசாத் யாழ்ப்பாணத்திற்காக மேற்கொள்ளும் சில அபிவிருத்தித் திட்டங்கள் இதனால் வெளியே வருவதில்லை. இதனால் அவை பற்றிய தகவல்கள் வெளியாவதில்லை.
தேசியத் தலைவர் றிசாத் பதியுதீனின் துணிகர செற்பாடு, போராடும் குணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென்ற சிந்தனை போன்றவற்றினால் எதிர்வரும் காலங்களில் வட மாகாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முஸ்லிம்களுக்கு ஒரு பாதிப்பு வரும்போது, இரவு பகல் என்று பாராது அங்கு முதலில் கால் பதித்து, முஸ்லிம்களுக்கு பணி செய்பவராக தேசியத் தலைவர் றிசாத் காணப்படுகிறார். அவரது கரங்களை பலப்படுத்துவது நம் அணைவரினதும் கடமையாகும்.
ஒருபக்கம் சிங்கள இனவாதிகளும் ஊடகங்களும், மறுபக்கம் தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும், புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்களும் றிசாத் பதியுதீனுக்கு எதிராக அவதூறையும், அச்சுறுத்தலையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சரின் பாதுகாப்பு அரணாக நாம் விளங்குவோமேயன்றி அவரைவிட்டு விலகிச்செல்ல மாட்டோம் எனவும் அமீன் உறுதிபடத் தெரிவித்தார்.

By

Related Post