Breaking
Sun. Dec 22nd, 2024

கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார்.

கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் கல்குடா பிரதேசத்தில் மீன்பிடி துறையை விருத்தி செய்யும் வகையில் கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருமாறு பிரதி அமீர் அலியிடம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதி அமைச்சர் மஹிந்த அமரவீர விடம் கூறியதற்கு அமைவாக மிக விரைவில் அமைத்து தருவதாக அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

மேலும், இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு வலை மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மாவட்ட மீன்பிடி திணைக்கள றுக்ஸான் குரூஸ் மற்றும் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

16298746_1349032801825075_5228810684049249740_n 16299340_1349032891825066_7206137328299697123_n 16386908_1349032868491735_2778658102157642322_n 16406893_1349033045158384_7768646839623173407_n

By

Related Post