Breaking
Mon. Dec 23rd, 2024

நேற்று 01.02.2017ஆம் திகதி வாழைச்சேனை மீனவ சங்கத்தினரின் அழைப்பின் பேரில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

வாழைச்சேனை முகத்துவாரத்தை அன்டிய பகுதியில் காணப்படும் கற்பாறைகள் காரணமாக மீனவ படகுகள் சேதம் அடைக்கின்றது இது தொடர்பாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இது தொடர்பாக மீனவர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடிப்படையாக கொண்டு பிரதி அமைச்சர் விஜயம் செய்தார்

மேலும் மீனவ படகுகள் அப்பகுதியில் சிரமபடுவதையும் நேரில் பார்த்து இது தொடர்பாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர விடம் மிக விரைவில் இதற்கான தீர்வினை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விஜயத்தில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபிக் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

16473432_1355482731180082_7493395741843304393_n 16387304_1355482747846747_4820232981423804813_n 16472937_1353399734721715_2250335616393305285_n 16298979_1353399714721717_2770589248185053644_n

By

Related Post