உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டுப் போட்டிக்காக இலங்கையில் இருந்து செல்லும் 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிதி வழங்கிவைப்பு.
நேற்று இரவு (15) உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து சென்ற 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினரும் வடமாகாண சபையின் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் தன்னால் இயன்ற உதவியை நேரடியாக இலங்கை விமான நிலையத்திற்கு சென்று வீர வீராங்கனைகளை ஊக்குவிக்குமுகமாகவும் அவர்களை சந்தோசத்தோடு வழியனுப்புமுகமாகவும் தனது சொந்த நிதியிலிருந்து சிறு தொகை பணத்தை வழங்கி வைத்ததோடு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி மாணவர்களின் கல்வியிலும் விளையாட்டு வீரர்களின் திறமையினை மேம்படுத்தவும் றிப்கான் பதியுதீன் அவர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பெரும்தொகையான பணத்தை இளைஞர் யுவதி மற்றும் மாணவர்களுக்கு ஒதுக்கி வருகின்றார்
அந்தவகையில் எமது நாட்டிற்கு பெருமை தேடித்தரும் வகையில் உலகக்கிண்ண ரோல் பந்து போட்டி நிகழ்வில் கலந்துகொள்ள பங்களாதேஸ் செல்லும் வீர வீராங்கனைகளை விமான நிலையத்தில் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார்
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் வருகையினை சற்றும் எதிர்பாராத மாணவர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியினை வழங்கும் வகையில் வீர வீராங்கனைகளுக்கு தேவையான பணத்தினையும் வழங்கி வைத்தார்
குறிப்பாக இந்த போட்டி நிகழ்வில் தெரிவான வீர வீராங்கனைகளில் 4 மாணவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவாகியுள்ளனர்
01.ஜே. திவ்யா ( மன்னார் சித்திவிநாயகர் பாடசாலை )
02.ஏ. திவ்யா ( மன்னார் சித்திவிநாயகர் பாடசாலை )
03.அண்டலின் ( மன்னார் சென் சேவியர் பெண்கள் பாடசாலை )
04.அருள் தர்சன் (மன்னார் சென் சேவியர் ஆண்கள் பாடசாலை )
ஏனைய வீர வீராங்கனைகள் சிங்கள மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்
இதன்போது எதிர்பாரா உதவியை செய்த றிப்கான் பதியுதீன் அவர்களிடம் கருத்து தெரிவித்த மாணவர்கள் ” உண்மையில் நாங்கள் இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வரும் என்று நினைக்கவில்லை இந்த போட்டி நிகழ்விற்கு தெரிவான வீர வீராங்கனைகள் பலர் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து வருகை தந்துள்ளனர் இவர்களின் பெற்றோர்கள் சிலர் கடன் பெற்றே இவர்களை அனுப்பி வைத்துள்ளனர் ஆனால் நாங்கள் பயணிக்க இருக்கும் இந்த நேரத்தில் எங்களுக்காக உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கியது மட்டுமல்லாது இனம், மொழி,பிரதேசம் பார்க்காமல் எங்கள் அனைவருக்கும் நீங்கள் உதவி செய்தமைக்கு முதலில் நன்றியை அனைவரும் தெரிவித்துக்கொள்கின்றோம் உண்மையில் வன்னி மாவட்ட மக்கள் சிறந்த அதிர்ஷ்ட சாலிகள் ஏனென்றால் சிறந்த ஒரு அரசியல் தலைவரான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழி காட்டலிலும் உங்களின் உதவி மற்றும் நீங்கள் உங்கள் மக்கள்மீது கொண்டுள்ள அக்கறை வேறு எந்த மாவட்டத்தில் உள்ள அரசியல் வாதிகளிடமும் இல்லை
உண்மையில் இன்று நாங்கள் முழுமையான சந்தோசத்தோடு வெளி நாட்டிற்கு செல்கின்றோம் வெற்றிபெற்று நாங்கள் அனைவரும் நாடு திரும்புவோம் எமது நாட்டிற்கு பெருமை தேடித்தருவோம்” என அனைத்து மாணவர்களும் தெரிவித்தனர்