Breaking
Sun. Dec 22nd, 2024

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் அறுவடை செய்யும் நெல் 15.02.2017ம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்முதல் செய்யப்படுமென்று கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதிமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  14.02.2017ம் திகதி மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலயே அவர் தெரிவித்தார். வாழைச்சேனை கமநல சேவைப் பிரிவிலுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் தங்களது நெல் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படவில்லையென்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்முதலை இன்னும் ஆரம்பிக்கவில்லையென்றும் ஓட்டமாவடியில் கவனயீர்ப்புப்பேரணியொன்றை நடாத்தி ஓட்டமாவடி பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளித்திருத்தனர். அதனையடுத்தே பிரதேச செயலாளர் பிரதியமைச்சர் அமீர் அலிக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பிரதியமைச்சர் அமீர் அலி கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன் மற்றம் கிழக்கு மாகாண நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் டபள்யு.எம்.என்.வீரசேகர ஆகியோரோடு தொடர்பு கொண்டு பிரச்சினை தொடர்பாக உரையாடியதன் பின்னர் இன்று முதல் நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் நாடு நெல் ஒரு கிலோ 38 ரூபாவுக்கும் சம்பா நெல் ஒரு கிலோ 41 ரூபாவுக்கும் கீரி சம்பா நெல் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும் கொள்முதல் செய்யப்படுமென்று பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

By

Related Post