Breaking
Sun. Dec 22nd, 2024

-என்.எம். அப்துல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே!
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் உணர்வுபூர்வமான போராட்டம் ஒன்று (2017.02.20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்டெடுக்கும் நோக்கில் 20 நாட்களுக்கும் மேலாக நடாத்திவரும் உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு வடமாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய ஆதரவு தெரிவித்து வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பல இடங்களில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள 50 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் பாடசாலையான யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியிலும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைதியான முறையில் பாடசாலையின் முன்னே இடம்பெற்றது.

இவ் அமைதிப் போராட்டத்தில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பெற்றோர் சங்க பிரதிநிதியும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினறுமான எம். றொக்கீஸ் உட்பட பலர் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேற்படி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு யாழ் மாவட்டத்தில் மீள் குடியேறி வசிக்கும் முஸ்லிம்களும், வெளிமாவட்டத்தில் வசிக்கும் யாழ் வாழ் முஸ்லிம்களும், வெளிநாடுகளில் வசிக்கும் யாழ் வாழ் முஸ்லிம்களும் தமது ஆதரவினைத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நில மீட்புக்கான உணர்வுபூர்வமான போராட்டம் வெற்றியடைவதற்கும் – அச் சிறார்களின் கல்வி நல்ல முறையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவும் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும் – தமது ஆதரவினையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றனர்.

os os77

By

Related Post