Breaking
Mon. Nov 18th, 2024

அமைச்சர் ஹலீமிடம் கோரிக்கை

வக்பு சொத்­துகள் சட்­டத்­திற்கு முர­ணாக கையா­ளப்­பட்­டு ­வ­ரு­வதைத் தடை­செய்­வ­தற்­காக சொத்­துகளை வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ள பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

குறிப்­பாக அரபு மத்­ர­ஸாக்­களும் அவற்­றுக்­கு­ரிய வக்பு சொத்­துக்­களும் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டா­ததால் மத்­ரஸா வக்பு சொத்­துக்கள் பல­வற்றில் முறை­யீ­னங்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் வக்பு சொத்­துக்­களைப் பரா­ம­ரிப்­பது தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் அரபு மத்­ர­ஸாக்கள் வக்பு சபையின் கீழ் பதிவு செய்­யப்­பட்டால் அவற்றின் சொத்­துக்­களை வக்பு சபையால் கண்­கா­ணிக்கக் கூடி­ய­தா­கவும் ஊழல்கள் நடை­பெற்றால் சட்­ட­ரீ­தி­யி­லான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­தா­கவும் இருக்கும். ஆனால் மத்­ர­ஸாக்கள் முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் மாத்­தி­ரமே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இதனால் மத்­ர­ஸாக்­களின் வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்கள் முறை­யீ­ன­மாக கையா­ளப்­பட்டால் சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் சிக்­கல்கள் ஏற்படுகின்றன.

இந்நிலைமையை தவிர்ப்பதற்கு அனைத்து அரபு மத்ரஸாக்களும் வக்பு சபையில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

By

Related Post