Breaking
Mon. Dec 23rd, 2024
வாழைச்சேனை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று 18.03.2017 ஆம் திகதி வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபீக்  தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
மீனவர்களின் பல பிரச்சனைகள்  ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் பெற்று கொடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கடற்படை  அதிகாரி விஜயரத்ன , Cosate Guard அதிகாரி சில்வா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  திபிடுமுனை, வாழைச்சேனை மீன்பிடி துறைமுக  முகாமையாளர் சசிதரன், மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் பரீட் , மீன்பிடி பரிசோதகர்களான  இம்தியாஸ், அர்ஷாட், அல் அமான் மீன்பிடி சங்க தலைவர் சம்சுதீன் மற்றும் படகு  உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.IMG_2009IMG_1976

Related Post