Breaking
Thu. Dec 26th, 2024

ஏ.எச்.எம் .பூமுதீன்

வன்னி மக்களுக்கான  வீடமைப்பு திட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு வழங்கும் 220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக – 130 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து குறித்த திட்டத்துக்கு உதவியளிக்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன் வந்துள்ளார்.

இது தொடர்பான அதிகார பூர்வ அறிவித்தலை அமைச்சர் பசில் மன்னார்  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசின் நிதி  உதவியுடன் நிர்மாணிக்கபடவுள்ள வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பசில் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

“வடமாகாண முஸ்லிம்களை குடியேற்றும்  விடயத்தில் அமைச்சர் றிஷாதின் பங்களிப்பு அளப்பரியது. அந்த மக்களை குடியேற்ற அமைச்சர் றிஷாத் கடுமையாக உழைகின்றார்.

இவ்வாறான நிலையில் பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதி கேட்டதன் பலனாகவே இந்த வீடமைப்புத்திட்டம் கிடைக்கப் பெற்றுள்ளது.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும்  அவர்களுக்கான வீடமைப்பு என்பவற்றை அமைச்சர் றிஷாத் முன்னெடுக்கும்போது அதற்கெதிராக சில மத வாதிகளும் இன வாதிகளும் சூழ்சிகளை செய்து சதிகளை  மேற்கொள்கின்றனர்.

மன்னாரில் முஸ்லிம் கொலனி என்றும் பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்து பேரினவாத இனவாத கும்பலொன்றும், ஊடகங்களும் அமைச்சர்  றிஷாதின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த   முனைவதையிட்டு வேதனையடைகிறேன். பயங்கர வாதம் முடிவுக்கு வந்த பிற்பாடு அகதிகளான  3 இலட்சம் தமிழ் மக்களை கௌரவமாக குடியேற்றி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் பெருமையை  ஏற்படுத்தி தந்தமையையிட்டு அமைச்சர் றிஷாதை நன்றியுடன் நினைவு கோருகின்றேன்.

Related Post