ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிலைமைகள் குறித்து அமைச்சரவை அமைச்சர்களே திருப்தியின்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியே ஒரே வழி என்பதனை ஆளும் கட்சியினர் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆளும் கட்சியின் பல உறுப்பினர்கள் ஆதரவளிப்பாளர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதேவேளை, எதிர்க்கட்சியுடன் எவரும் இணைந்து கொள்ள விரும்ப மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடைய எவரும் விரும்ப மாட்டார்கள் எனவும் எனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளும் கட்சியினர் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் அனுரபிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.