சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை தவறாகப் பயன்படுத்தி பொலிஸார் தங்களின் சத்தியாக்கிரக கூடாரம் அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழு செல்ல இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருப்பின் அது குறித்து மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ அல்லது நீதிமன்றத்தை நாட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.