Breaking
Thu. Jan 16th, 2025
நஜீப் பின் கபூர்
2015 நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்ஹாவை வேட்பாளராக ஏற்க முடியாது. அப்படி அவர் வேட்பளராக வந்தால் வெற்றி பெறவும் மாட்டர். எனவே மீண்டும் இவ்வாறான ஒரு வாய்ப்பான நேரம் மீண்டும் கிடைக்க ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள்லேயே ஒரு தரப்பினர் தற்போது கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இந்த நேரத்தில் யானைச் சின்னத்தில் போட்டி போடுவது என்பது பொருத்தமான வேலையல்ல எல்லாத் தரப்பினரையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு ஒரு பொது Nவைலைத் திட்டத்துடனே நாம் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுகக் வேண்டும். பலமான ராஜபக்ஷவுக்கு ரணில் விக்கிரமசிங்ஹவால் எந்த வகையிலும் முகம் கொடுகக் முடியாது. எனவே ஒரு பொது வேட்பாளர் காலத்தின் தேவை என்ற கருத்துக்ககு ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது ஆதரவு வலுத்து வருகின்றது.
இந்த நிலமையை ரணில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அபிப்பிராயப்படுவதுடன் நிலமையை ரணிலுக்கு விளக்க இவர்கள் முற்படுவதாகவும் தெரிகின்றது. சஜித் இந்தத் தேர்தலில் ரணில் சார்பாக களமிறங்குவது அவரது தனிப்பட்ட நலன்களுடன் தொடர்புடைய விடயம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
இந்த நேரத்தில் நாட்டு நலனையும் பொது நலனையும் கருத்தில் கொண்டே மஹிந்த ராஜபக்கஷவுக்கு எதிரான வேட்பாளர் பற்றி நாம் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் கருதுகின்றார்கள். இந்தத் தேர்தலில் ரணில் போட்டியிட்டு தோல்வி அடையும் போது ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் மேலும் விரக்தி;யடைந்த விடுவார்கள் இதனால் கட்சி ஆதாள பாதளத்திற்குப் போய் விடும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இதற்கிடையில் நாம் ரணிலை ஆதரித்தே இந்தத் தேர்தலில் களம் இறங்குவோம் என்றாலும் இந்தத் தேர்தலில்  ரணில் வெற்றி பெறமாட்டார் என்பதும் எங்களுக்குத் நன்றாகத் தெரியும் என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கரனாரத்தன குறிப்பிடுன்றார்.

Related Post