Breaking
Thu. Jan 16th, 2025
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியையான எனது மனைவியும் ஏமாற்றப்பட்டுவிட்டால் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. சுனில் ஹந்துன் நெத்தி இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்  நேற்று பாராளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு நிவாரணங்கள் தொடர்பான அறிவிப்புக்களை அடுக்கிச் சென்றிருந்தார். ஆனால் அவரது அனைத்து அறிவிப்புக்களுமே காற்று நிரப்பட்ட பலூன்களாவே பறந்துகொண்டிருந்தன. இந்த விடயத்தை எனது மனைவியால் ஊகித்துக்கொள்ள முடியவில்லை.
வரவு செலவுத் திட்ட உரை நிறைவடைந்து நான் வீட்டுக்கு சென்ற போது ஆசிரியையான எனது மனைவி ஓடி வந்து ஜனாதிபதி இவ்வளவு சலுகைகளை அறிவித்து விட்டாரே. எதிர்க்கட்சியினராகிய உங்களால் இனி என்னதான் செய்ய முடியும். உங்களால் எதுவும் பேசமுடியாது போயுள்ளதே எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொதிந்து கிடக்கும் தத்துரூபம் எனது மனைவிக்கு புரியவில்லை என்பதை தெரிந்துகொண்டேன்.
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவித்துள்ள நிவாரணங்களை விட மக்களிடத்திலிருந்து பறித்தெடுக்கும் தொகை அதிகமானது என்பது எனது மனைவிக்கு மாத்திரமல்ல இந்நாட்டிலுள்ள பலரும் அறியாதுள்ளனர். அந்தளவுக்கு மாயாஜால வார்த்தைகளால் வரவு செலவுத் திட்டம் வரையப்பட்டடிருக்கின்றது என்றார்.

Related Post