Breaking
Thu. Jan 16th, 2025
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மாணவர் ஒருவர் மலேசியாவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ”மொனாஷ்” பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரியாத் நகரில் உள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் பழைய மாணவரும் மொனாஷ் பல்கலைக்கழக பொறியியல் பீட இரண்டாம் ஆண்டு மாணவருமான ஷிஹாப் அஸ்கர் அவர்கள் கடந்த மாதம் மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 6000க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட வாக்கெடுப்பில் 52 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று அமோக வெற்றியீட்டினார். சீன நாட்டு மாணவர்களை அதிகம் கொண்ட இப்பல்கலைக்கழககத்தில் இலங்கை மாணவர் ஒருவர் முதல் தடவையாக இப்பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டிருப்பது இலங்கைக்கு
கிடைத்த பெருமை.
தலைமைப்பொறுப்பை ஏற்ற ஷிஹாப் எதிர்வரும் மாதங்களில் இப்பல்கலைக்கழக மாணவர் விவகாரங்களை கவனிக்க முதல்தடவையாக ஆஸ்திரேலியா பயணமாகவுள்ளார். உலகிலுள்ள அதி சிறந்த பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலில் மொனாஷ் பல்கலைக்கழகம் 91வது இடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post