தேசப்பற்று என்ற பெயரில் சில கடும்போக்குவாதிகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
போர் வென்றெடுக்கப்பட்டுள்ளது. போர் வெற்றியின் கௌரவத்தை ஆட்சி அதிகாரத்திற்கு வழங்குவதனைப் போன்றே நாம் வருந்துகின்றோம். ஏனெனில் போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும் சமாதானம் நாட்டில் நிலைநாட்டப்படவில்லை.
இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாடு என்ற ரீதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுக்கும் தரப்பினரே இன்று நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். மீண்டும் ஒரு தடவை நாட்டில் இனவாத விதைகளை தூவி அதனை வளரச் செய்வது தேசப்பற்றா? தேசத்தின் மீது கொண்ட நேசமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசப்பற்று என்ற பெயரில் சில கடும்போக்குவாதிகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.