சிறு பிள்ளைகளைக் காண்பித்து பிச்சையெடுக்கும் யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்தனர்.
பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களைக் காண்பித்து பிச்சையெடுப்பவர்களைக் கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தினூடாக கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த பிள்ளைகளின் உண்மையான பெற்றோர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான
அஜித் ரோஹன தெரிவித்தார்.