ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்லில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிநான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு தையல் இயந்திரம், மண்வெட்டி, மருந்து விசுரும் கருவி, மேட்டு நில பயிர்செய்கைக்காக சோளன் கச்சான் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் நானூறு குடும்பங்களுக்கு பதினாறு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம் பெற்றபோது பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு பகிர்ந்தளித்தார்.
இந் நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.