”மில்லியன் மார்ச்” என்று கூறப்பட்ட இந்த போரட்டம் லண்டனில் உள்ள டிராபால்கார் சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி பேசுவதற்கு முற்பட்ட போது, கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த ஒலி எழுப்பி வெற்று பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் முட்டைகள் உள்ளிட்டவைகளை வீசி அவரை பேசவிடாமல் தடுத்தனர்.
”காஷ்மீருக்காகவும் காஷ்மீர் மக்களின் நலனுக்காகவும் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. பிலாவல் பூட்டோ இங்கு தனது தொழிலை செய்ய முடியாது” என்று கிழக்கு மிட்லாண்ட் பகுதியான டெர்பியில் இருந்து வந்துள்ள போராட்டாக்காரர்கள் கோபத்துடன் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் பிரதமர் என்று கூறப்படும் சுல்தான் மகமூத் சவுத்ரி தலைமையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் மிர்புரி வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் நடாளுமன்ற உறுப்பினர் லார்டு நாசீர் அகமது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
பல்வேறு சமூகத்தினரிடம் இருந்து பலத்த ஆதரவு கிடைத்ததாக போராட்டம் நடத்திய குழு தெரிவித்தது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களின் தேசிய நலனுக்கு எதிராக இந்த போராட்டம் அமைந்ததாக மற்றவர்கள் தெரிவித்தனர்.
இதே போராட்டத்தை நேற்று லண்டனில் நடத்திய எதிர்ப்பு குழு ஒன்று தங்களது போராட்டத்தின் முடிவில் இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோருக்கு குறிப்பாணை ஒன்றை அந்ததந்த நாடுகளின் தூதகரத்தில் சமர்பித்தது. ”ஜம்மு காஷ்மீர் உள்ள அனைத்து குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மதிக்க வேண்டும்” என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அந்த குறிப்பாணை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
-Dailly Thandi-