Breaking
Mon. Dec 23rd, 2024

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, அதிகரித்த வாழ்க்கைத்தரத்தையும், வளத்தையும் உலகமயமாக்கல் கொண்டுவருவதாகவும், நிதி வளத்தை அதிகரிப்பதற்கு அது உதவுவதோடு பொருpயல் மற்றும் சமூக அடிப்படையில் விரும்பத்தக்க விடயமாக அதனை நாம் கருதமுடியும் என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு சமுத்ராதேவி பாலிகா வித்தியாலயத்தின் வர்த்தக மாணவர்கள் ஏற்பாடு செய்த வர்த்தக தின விழா ‘உலகமயமாக்கல்’ என்ற கருப்பொருளில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு  அமைச்சர் உரையாற்றினார்.

கல்லூரியின் அதிபர் ரேணுகா ஜயவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவது,

இன்று தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல,; பண்பாடு ஆகிய இன்னும் பல துறைகளில்  முன்னேற்றங்கள் ஏற்பட்டமைக்கு உலகமயமாக்கலே வழிவகுத்துள்ளது. அத்துடன்  உலக சமூகங்களுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க இது பெரிதும் உதவிவருகின்றுத. அதுமட்டுமன்றி, ஒருவரொடு ஒருவர் தங்கிவாழும் நிலையையும் இது ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாடசாலையின் வர்த்தக மாணவர்கள் ‘உலகமயமாக்கல்’ என்ற கருப்பொருளில் நடாத்தும் வர்த்தக தின விழாவில் கலந்துகொள்வதையிட்டு, பெருமிதமடைகின்றேன்.  காலத்துக்குப் பொருத்தமான முறையில் இந்தவிழாவின் தொனிப்பொருளை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நூற்றாண்டுகாலம் பழமைவாய்ந்த இந்தப்பாடசாலை இலங்கையின் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளையும், வெற்றிகளையும் படைத்துள்ளதுடன் நாட்டின் பிரபல்யமடைந்த பாடசாலையாகவும் விளங்குகின்றது.

நீண்டகாலம் வர்த்தகம் மற்றும்  வாணிபத்துறை, அமைச்சராக இருந்துவருவதனால் உலகமயமாதல்  என்ற விடயம் தொடர்பில் ஆழ்ந்த அனுபவமும் பரிச்சயமும் எனக்குண்டு.

உலகமயமாக்கலின் பயனாக ஜேர்மனியின் பி.எம்.டபிள்யு ஐக்கிய அமெரிக்காவின் கொக்கோகொலா, சீனாவின் ஹுவாவே போன்ற சர்வதேச சந்தைகளில் பங்குபற்றும் வாய்ப்பும்  ஈடுபாடும் எமக்கு கிடைத்தது. அதே போன்று நமது நாட்டின் டில்மா தேயிலை, டெம்ரோ வீட்டுப்பாவனைப் பொருட்கள், மாஸ் பிரண்டிஸ், புடவை ஆடை பொருட்கள் பிரசித்தி பெறுவதற்கு உலகமயமாக்கலே வழிகோலியது.

உலகமயமாக்கல் தொடர்பில் மாணவர்களாகிய நீங்கள் ஆழ்ந்த அறிவைப் பெறவேண்டும். அதன் மூலமே எதிர்காலத்தில் நீங்கள் முன்னேறமுடியும். சர்வதேசத்தை வெற்றிபெறக் கூடிய சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவவிடவேண்டாம். எதிர்காலங்களில் உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளை நீங்கள் அடைவதற்கு இந்த அறிவு உதவும் என நான் பெரிதும் நம்புகின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

Related Post