எம்.ரீ.எம்.பாரிஸ்
கிழக்கிழங்கையின் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் மட்டக்களப்பு கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்திற்கு மிக நீன்ட கால தேவையாக காணப்பட்டு வந்த அலுவலக உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நிறுவனத்தின் உப.தலைவர் ஏ.எம்.முர்ஷிதீன் தலைமையில் இன்று (27)திங்கட்கிழமை மீராவோடை கிராமத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ,ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ் ஹாரூன்(ஸஹ்வி)கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் அதிகாரி எச்.எம்.எம்.றுவைத் கிம்மா நிறுவனத்தின்; செயலாளர் ஐ.எம்.றிஸ்வின்,உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர்களான எஸ்.எம். தௌபீக்,ஏ.அக்பர் கலாசார நிறுவனத்தின் செயலாளர் எம்.ரீ.எம். ஹைதர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.