Breaking
Mon. Dec 23rd, 2024
கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உபயோகித்த தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100பெரல்களையும், இரசாயனப் பொருட்களை அடைக்கும் 25கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய் பெரல்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றினர்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரசபை அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையின் பின்;னர், இந்த சட்டவிரோத வியாபார நடவடிக்கையை கண்டுபிடித்தனர்.
பாவித்த தேங்காய் எண்ணெய், நுகர்வோரின் பாவனைக்கு வழங்காமல், வேறு பாவனைக்கே விற்கப்படுவதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் அதிகாரிகளிடம்  தெரிவித்த போதும் அதற்கான எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லையென சுற்றிவளைப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் மனித பாவனைக்கு தடைசெய்யப்பட்ட இரசாயனப் பதாhர்த்தங்களை அடைக்கும் கொள்கலன்களில் தேங்காய் எண்ணெய்யை நிரப்புவதற்கு தயார்நிலையில் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நாடெங்கிலும் சட்டவிரோதமாக விற்பனை செய்வோரையும், கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக கொள்ளை இலாபமடிக்கும் வர்த்தகர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு

Related Post