Breaking
Mon. Dec 23rd, 2024

இந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன்  பச்சை நாட்டு அரிசி, இன்று (10) கொழும்புதுறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட அரிசித்தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு உபகுழு மேற்கொண்ட முடிவுக்கமைய இலங்கை அரசாங்கம் இந்திய தனியார் துறையினரிடம் இருந்து 72000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதையடுத்தே அதன் முதலாவது தொகுதி இன்று கொழும்புத் துறை முகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“அரிசித் தட்டுப்பாட்டை நீக்கும் வகையிலும் அதன் விலையை சாதாரணமாக சந்தையில் பேணும் வகையிலும் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரிசியானது சந்தையில் பாவனைக்கு விடப்படுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.”

கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்த குறிப்பிட்ட அரிசித் தொகுதியை கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் பொறுப்பேற்று லங்கா சதொச விற்பனை நிலையங்களூடாக நுகர்வோருக்கு கிலோ ரூபா 74/- இற்கு விற்பனை செய்யுமென அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்திய தனியார் துறையினரிடமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் கிலோ ஒன்றுக்கு ரூபா 72/- இற் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு.

Related Post