எம்.ரீ.எம்.பாரிஸ்
போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வும் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் மட்டக்களப்பு மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சீ.ஜிப்ரி கரீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர்,கோட்ட கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாகிபு உள்ளீட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் மூலம் வழங்கப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் உத்தியோக பூர்வமாக பாடசாலை அதிபரிடம் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் மூலமாக கையளிக்கப்பட்டது.
இதே வேளை அதிதிகளினால் ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் நினைவுச்சினங்களையும் பரிசீல்களையும் வழங்கி கௌரவித்தனர்.