எம்.ரீ.எம்.பாரிஸ்
மட்டக்களப்பு செம்மண்ணோடை றோஸ் முன்பள்ளியின் 20வது மாணவர் வெளியேற்று விழாவும் பரிசளிப்பு வைபவமும் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை சாட்டோ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.ஏ கபூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ் ஹாரூன்(ஸஹ்வி)அதன் செயலாளர் ஐ.எம்.றிஸ்வின் கிராம சேவையாளர் எம்.எம்.சாதாத் பாரி ஜூம்ஆப்பள்ளிவாயல் தலைவர் ஏ.மிராசாய்வு (ஹாஜி)சட்டோ விளையாட்டு கழக தலைவர் வை.எல்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்து பாராட்டி நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தனர்.