Breaking
Mon. Dec 23rd, 2024

கடந்த காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை எந்த நிலையில் வைத்து பார்த்தார்களோ அதே நிலையில் இன்று என்னையும் பார்க்கிறார்கள் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற பாராளுமன்ற சிரேஷ்ட உரை பெயர்ப்பாளர் எம்.எம் ராஸிக் எழுதிய ஹெம்மாத்தகம முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு எனும் நூலின் அறிமுக விழா நேற்று கொழும்பில் உள்ள ஜம்மியதுஸ் சபாப் கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது பிரச்சனைகளை பேசும்போது அது சிங்கள மக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கப்படுவதால் இன்று சிங்கள இளைஞர்கள் என்னை கொலை செய்யும் அளவுக்கு உணர்வுகளால் தூண்டி விடப்பட்டுள்ளார்கள்.

அதுமட்டுமன்றி Protect Wilpaththu என்ற முகப்புத்தகத்தை ஜனாதிபதியுனுடைய செயலகத்தில் இருந்தே இயக்குகிறார்கள் அதனை நான் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியும் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post