தொழில் நிமித்தம் சவுதி செல்லும் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை
தொழில்வாய்ப்புக்காக பணியாளர்களுக்கு வீசா வழங்கும் முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு சவுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொழில்வாய்ப்பிற்கு பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தொழில் வழங்குனர்களின் செலவை குறைத்துக்கொள்வதும், பணியாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் இந்த நடவடிக்கைக்கான காரணமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைமை அந்நாட்டு தொழிற்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமையின் ஊடாக பணியாளர் ஒருவரை அமர்த்துவதற்கு சவுதி குடும்பமொன்று செலவிடும் 20 ஆயிரம் ரியால்கள், இரண்டாயிரம் ரியால்களாக குறையுமென தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி தொழிற்துறை அமைச்சினால் 2013 ஆம் ஆண்டு 7,14,000 பணியாளர்களுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணியாளர்களின் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்வதற்காக 08 மொழிகளில், 24 மணித்தியாலங்களும் இயங்கும் தொலைபேசி சேவை சவூதி தொழிற்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(jm)