பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆறு லயன்களிலும் 50 வீடுகள் இருந்ததாகவும் அதிலிருந்த சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு குறித்து கொஸ்லாந்தை காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ள போதும், பாதிப்புகள் குறித்த விபரங்களை உடனடியாக வழங்க முடியாதிருப்பதாக தெரிவித்தனர். TM