Breaking
Thu. Jan 16th, 2025
ஹப்புத்தளை – ஹல்துமுல்ல – மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார அத தெரணவிடம் தெரிவித்தார்.

மீறியபெந்த தோட்டம் முழுமையாக மண்சரிவில் சிக்கியுள்ளதால் அங்கு இருந்த மக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகின்றார்.

ஒட்டுமொத்த அரச அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் எம்.எல்.உதயகுமார அத தெரணவிடம் தெரிவித்தார். படங்கள் இணைப்பு :நன்றி வீரகேசரி 01_7 02_6 03_6

Related Post