ஊடகபிரிவு
வவுனியா மாவட்ட பஸ் டிப்போவுக்கு 10 பஸ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் புதிய பஸ்களை வழங்கி வைத்தார்.
அதேவேளை, அகில இலங்கை மக்கள் இ.போ.ச தொழிலாளர் சங்க கட்டிடத்தைத் திறந்து வைத்ததுடன் பஸ் டிப்போவின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்த அமைச்சர், 10 வருடங்களுக்கு மேல் சேவை புரிந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வையும் வழங்கி வைத்தார்.