செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் வன்னியாராச்சி, உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.கருணாகரன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களான எஸ்.சசிதரன், வி.மகேஸ்வரன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.சுனில், எஸ்.நிமால், எஸ்.ஜெயரட்ணம், எஸ்.சமன், எம்.எஸ்.றிஸ்மின், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மங்களகம பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தில் நாற்பது வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஐந்து இலட்சம் நிதிப்பங்களிப்பும், மக்கள் பங்களிப்பு இரண்டு இலட்சத்திலுமாக ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அமைக்கப்படவுள்ளது.
இதன்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கச்சான்;, சோளம்;, மண்வெட்டி என்பன நாற்பத்தி ஐந்து பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.