Breaking
Tue. Jan 7th, 2025

 

காலி மாவட்டத்தின் ஜிந்தோட்டை மற்றும் அதனை அன்மித்த பகுதியில் நேற்று (17.11.2017) இடம்பெற்ற அசாதாரண நிலை பற்றி கண்டறிவதற்காக  சனிக்கிழமை மாலை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேரில் சென்று பார்வையிட்டார்.

காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில்  (17.11.2017) இரண்டு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட மேதல்களில் பெரும்பான்மை இன சகோதரர்களால் முஸ்லீம்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.
அப்பிரதேசத்தில் மக்களுடன் ஜிந்தோட்டை பள்ளிவாயலில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சென்று பார்வையிட்டதுடன் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை பிரதமர் மற்றும் பாதகாப்பு அமைச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியுடன் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டார்.

காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை மாலை 6.00மணி தொடக்கம் நாளை காலை 6.00மணி வரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மேலும் தெரிவித்தார்.

Related Post