Breaking
Mon. Dec 23rd, 2024

திருகோணமலை மாவட்ட ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, பால்சேகரிக்கும் நிலையத் திறப்பு விழா அண்மையில் (26) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாகப் பங்கேற்றனர்.

பிராந்திய முகாமையாளர் க. கணகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பால் பண்ணையாளர்களின் தொழில் முன்னேற்றத்துக்கான ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பொது முகாமையாளர் பெர்ணான்டோ, பிரதேச சபை செயலாளர் சாந்தரூபன் உட்பட பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

Related Post