Breaking
Wed. Dec 25th, 2024

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில், வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலை, பண்பாட்டுப் பெருவிழா-2017 நிகழ்வு வவுனியா, நகரசபை கலாச்சார மண்டபத்தில் அண்மையில் (04) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான ஜயதிலக்க, லிங்கநாதன், இந்திரராசா ஆகியோரும், அமைச்சரின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது, வவுனியா மாவட்டத்தின் கலை, இலக்கியப் பணிகளுக்கு ஆற்றி வரும் சேவைகளைப் பாராட்டும் முகமாக, எம்.ஐ.முத்து முஹம்மது அவர்களுக்கு “வவுனியம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Related Post