Breaking
Tue. Dec 24th, 2024

-ஊடகப்பிரிவு-

கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சிப் பணிகளை விரிவுபடுத்தியதனை அடுத்து, அந்த பிரதேசத்தில் உள்ள பல சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.காதரின் (கம்பளை காதர் ஹாஜியார்) மருமகன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர்களான நசார், உடையார், ஹனீபா ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டனர்.

நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட்டும் பங்கேற்றிருந்தார்.

கண்டி மாவட்டத்தின் நீண்டகாலமாக பேரினவாதக் கட்சிகளுடன் சேர்ந்து, அரசியல் நடவடிக்கைகளைத் தாங்கள் முன்னெடுத்து வருகின்ற போதும், இந்த மாவட்ட முஸ்லிம்களுக்கு இற்றை வரை எந்த விமோசனமும் கிடைக்கவில்லை.

ஆசிரியர் இடமாற்றம் ஒன்றினைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில், எமது அரசியல் வாழ்வு இருக்கின்றது. மக்களின் சிறிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்வதில் பல கஷ்டங்கள் இருப்பதாகவும், அதிகாரத்தில் உள்ள பேரினவாத அரசியல்வாதிகளிடம் கெஞ்சிப் பெறவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

தனித்துவமான முஸ்லிம் அரசியலை மேற்கொள்வதாகக் கூறி வாக்குகளைப் பெற்றவர்கள், பேரம் பேசுதலுக்குப் பதிலாக, அந்தக் கட்சிகளுடன் இணைந்து  சுயநல அரசியலை மேற்கொண்டு வருவது வேதனையானது. இந்த வகையில் நாட்டிலே வாழும் சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு சிறந்த தலைமையாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாங்கள் இனங்கண்டோம்.

எனவேதான், அவரின் கரத்தைப் பலப்படுத்துவதற்கு முயற்சித்தோம். எதிர்வரும் காலங்களில் கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு புதிய தெம்பையும், உத்வேகத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அளிக்குமென நாங்கள் உறுதி கூறுகின்றோம் என்று புதிதாக மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

Related Post