Breaking
Tue. Dec 24th, 2024

 

-முர்ஷித்-

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கிலும், ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின்

பிரதி அமைச்சர அமீர் அலி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கோறளைப்பற்று பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை திங்கட்கிழமை (11) செலுத்தினர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கோறளைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுகின்றது.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அமீர்அலி கூறியதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையினை கைப்பற்றும் நோக்குடன், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் கைப்பற்றப்படும் முதலாவது சபையாக கோறளைப்பற்று இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு காலத்திலும் இல்லாத அளவுக்கு வேட்பாளர்கள் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் இணைத்து இந்த பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டமைப்பினை உருவாக்கி அம்பாறை மாவட்டத்திலும், இலங்கையின் வேறு பாகங்களிலும் போட்டியிடுவதற்கு அந்தக் கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

தேர்தல் கூட்டு என்பது, கட்சிகளுக்கிடையே கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சியுடன், இணைந்து செயற்படுவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

Related Post