Breaking
Sun. Jan 12th, 2025

5 மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமண்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனைக் கண்டித்து இராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காமடம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று பெரும் போராட்டம் வெடித்தது. வாகன, ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பின்னர் தமிழக அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் இன்று தங்கச்சிமடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. (oi)

Related Post