Breaking
Tue. Dec 24th, 2024

 

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டின் கீழ்,  சியம்பலாகஸ்கொடுவ ஜும்ஆ பள்ளிவாசலில், மலசல கூட புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் (12) ஆராம்பித்து வைக்கப்பட்டது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில், முன்னாள் குளியாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் இர்பான் மற்றும் அப்துல் கையூம் ஆகியோரின் பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிக்காக, சுமாார் 17,00 000 ரூபா நிதி, அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன்,  மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், பள்ளி நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related Post