16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிறுமியின் சித்தப்பா கைதுசெய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசமக்கள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து லிந்துலை கூமூட் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணி புரிவதாகவும் தந்தை வியாபாரி எனவும், இதனால் சிறுமி தனது சித்தப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மேற்படி சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமி பொலிஸாரின் உத்திரவின் படி தனது சித்தியோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் கைது செய்தவரை இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.