Breaking
Mon. Dec 23rd, 2024

 

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியின் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும், பிரதேச சபை வேட்பாளருமான அஸ்வரின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன், அமைப்பாளர் அஸ்வர் மற்றும் பள்ளித் தலைவர், நிர்வாக சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முகியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

 

Related Post