இன்று வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மற்றும் தகுதி பெறாதா மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவ மாணவியர்களை பாராட்டுவதுடன், அவர்களை கற்பித்த ஆசான்கள் அவர்களுக்கு கல்வி கற்பதில் ஒத்தாசையாக இருந்த பெற்றோர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தங்களுக்கு பல்கலைக்கழகம் கிடைத்துவிட்டது என்று, தனது கல்வி முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்காமல், தான் சார்ந்த துறைகளில் மேல்படிப்புக்களை தொடர்வதற்காக இன்றிலிருந்து தயாராகிக்கொள்ளுங்கள். கல்வியில் ஒரு போதும் முடிவு இல்லை. தான் சார்ந்த கல்வித்துறையில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற என்னத்தினை ஒவ்வொருவரும் தங்களது மனங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தான் விரும்பும் துறையில் வெற்றியடைய முடியும்.
அதே போன்று, பரீட்சையில் போதியளவு பெறுபேருகளைப் பெறாதா மாணவ மாணவிகள் மனம் தளர்ந்து போகாமல், தங்களது வெற்றிப்பாதைக்கான ஆரம்ப கட்டம் இப்போதுதான் ஆரம்பமாகியுள்து என்ற என்னத்துடன், அடுத்த வருடம் நடைபெறப் போகும் உயர்தரப் பரீட்சையில் மிகவும் சிறந்த பெறுபேருகளைப் பெற்று, தனது பெற்றோருக்கும் தான் கல்வி கற்ற பாடசாலை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நற்பெயரை பெற்றுக் கொடுப்பேன் என்ற வைராக்கியத்துடன், இன்றிலிருந்தே கல்வி கற்க ஆரம்பிக்க வேண்டும்.
அத்துடன் அடுத்த வருடம் நடைபெறும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்று, எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றவர்களாக மாற வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் பிராத்தித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.